ஐபிஎல் 2022: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; ஒற்றையாளய் போராடிய ஹெட்மையர்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
Trending
அதன்படி களமிறங்கிய ராஜ்ஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் 13 ரன்களில் பட்லர் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 29 ரன்னிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து அறிமுக ஆட்டத்தில் களமிறங்கிய வெண்டர் டூசென் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர்.
அதன்பின் 28 ரன்களைச் சேர்த்திருந்த அஸ்வின் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேற மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஷிம்ரான் ஹெட்மையர் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிம்ரான் ஹெட்மையர் 59 ரன்களைச் சேர்த்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் இணை தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now