ஐபிஎல் 2022: சிறப்பாக பந்துவீசியது குறித்து மனம் திறந்த டேனியல் சாம்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி ஓவரில் எப்படி கட்டுப்படுத்தினோம் என்பது குறித்து டேனியல் சாம்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 51ஆவது லீக் போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 177/6 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய குஜராத் அணி 172/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
Trending
இந்த போட்டியில் கடைசி ஓவர் தான் திருப்புமுணையாக இருந்தது. குஜராத் அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. விருதிமான் சாஹா 55 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதன்பின்னர் வந்தவர்கள் சோபிக்கவில்லை. கேப்டன் பாண்டியா 24ரன்கள் சாய் சுதர்சன் 14 ரன்கள், ராகுல் தேவட்டியா 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து நடையை கட்டினார்.
இதனால் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் மில்லர் மற்றும் ரஷித் கான் இருந்தனர். டேனியல் சாம்ஸ் பவுலிங் வீசினார். எப்படியும் குஜராத் தான் வெல்லும் என பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்து சிங்கிளாக அடிக்க, 2ஆவது பந்து டாட் ஆனது. பிறகு 3வது பந்தில் விக்கெட் பறிபோனது.
அடுத்த 3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அனைவருக்கும் பதற்றம். ஆனால் அந்த 3 பந்துகளில் 1, 0 என வந்ததால் கடைசி ஒரு பந்தில் சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தும் டாட் பாலாக செல்ல, மும்பை அணி அபார வெற்றி பெற்றது. ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இதே போன்ற வெற்றியை மும்பை அணி இதற்கு முன்பும் பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மலிங்கா வீச, சிஎஸ்கேவால் 6 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை சாம்பியன் பட்டம் வென்றது.
இதுகுறித்து பேசிய டேனியல் சாம்ஸ், “கடைசி ஓவரில் என்மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான். அது இழப்பதற்கு என்னிடம் இனி எதுவும் இல்லை என்பது தான். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக களம் இருந்தது. இதனால் இந்த முறை வைட் லைனுக்கு உள்ளே தான் பந்துவீச வேண்டும் என தெளிவாக இருந்தேன். ஸ்லோவர் பால் தான் உதவும் என நினைத்தேன். அதற்கு பலன் கிடைத்துவிட்டது. மும்பை அணிக்கு தற்போது மினி ஐபிஎல் நடக்கிறது போன்று நினைக்கிறோம். மீதமுள்ள அனைத்திலும் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now