 
                                                    
                                                        IPL 2022: Jadeja, Jordan, Bravo, Joins MS Dhoni-Led Chennai Super Kings  (Image Source: Google)                                                    
                                                ஐபிஎல் 2022 நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன. சர்வதேச அணிகளிலிருந்து ஐபிஎல் அணியுடன் இணையும் வீரர்கள், பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸும் இதுபோன்ற அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அணியுடன் இணையும் விடியோவை வெளியிட்டிருந்தது.
தற்போது 'ஜேஜேஜே' என 3 அப்டேட்களை அறிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். ஐபிஎல் ஏலத்தில் தேர்வான கிறிஸ் ஜோர்டன், அணியுடன் இணைந்துள்ள புகைப்படம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. டுவைன் பிராவோவும், தான் திரும்பிவிட்டதாகக் கூறிய செய்தியை சிஎஸ்கே நிர்வாகம் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        