
IPL 2022: jagadeesha suchith unique record in ipl after dismissed virat kohli for golden duck (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது. 193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி 19.2 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த சீசனில் ஏற்கனவே 2 முறை கோல்டன் டக் அவுட்டாகி மோசமான ஃபார்மில் உள்ள கோலி, இந்த போட்டியிலும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சாளர் ஜெகதீஷா சுஜித்தின் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஜெகதீஷா சுஜித் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ஐபிஎல்லில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய 3வது ஸ்பின்னர் என்ற சாதனையை சுஜித் படைத்துள்ளார்.