
IPL 2022: KKR appoint Bharat Arun as bowling coach (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் நடப்பு சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. மேலும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களுக்கான பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அதேசமயம் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.