
IPL 2022: KKR skipper Shreyas Iyer lauds Sunil Narine, Umesh Yadav, Rinku Singh after win over RR (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன் எடுத்தார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆரோன் பின்ச் 4 ரன்னிலும், பாபா இந்திரஜித் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன் எடுத்து அவுட் ஆனார்.