
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹானே நிதானமாக ஆட, வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர், 24 பந்தில் 43ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ரஹானே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
14வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் ஐயரை 6 ரன்னில் முருகன் அஷ்வின் வீழ்த்த, அப்போது கேகேஆர் அணியின் ஸ்கோர் 123 ரன்கள். 15ஆவது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் ஆண்ட்ரே ரசல் (9) மற்றும் நிதிஷ்ராணா(43) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். அதற்கடுத்து பும்ரா வீசிய 18ஆவது ஓவரில் சுனில் நரைன், பாட் கம்மின்ஸ் மற்றும் ஷெல்டான் ஜாக்சன் ஆகிய மூவரையும் வீழ்த்த, 20 ஓவரில் 165 ரன்களுக்கு கேகேஆரை கட்டுப்படுத்தியது மும்பை அணி.