ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஹைதாராபாத் அணியில் மீண்டும் நடராஜன்!
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ரூ. 4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

IPL 2022 Mega Auction 2022: Natarajan sold to Sunrisers Hyderabad for 4 crores (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பேட்டர்கள், ஆல்-ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள் ஏலத்தைத் தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவதாக தமிழக வீரர் நடராஜன் பெயர் அறிவிக்கப்பட்டது. அவரை அணியில் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்திலேயே முனைப்பு காட்டியது.
Trending
இதன் விளைவாக ரூ. 4 கோடிக்கு மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கே நடராஜன் தேர்வானார். கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாத நடராஜன் அதற்கு முந்தைய ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி தனது யார்க்கர் பந்துகளால் அனைவரையும் கவர்ந்தார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News