ஐபிஎல் 2022: ஹர்பஜன் சாதானையை முறியடித்த பும்ரா!
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

IPL 2022: MI pacer Jasprit Bumrah becomes first Indian bowler to achieve THIS big feat (Image Source: Google)
ஐபிஎல் 2022 தொடரின் 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா, முன்னாள் மும்பை வீரர் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்தார்.
நேற்று (மே-21) நடந்த போட்டியில் மும்பை தில்லி அணியை எதிர்கொண்டது. இதில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார். மும்பை அணி வெற்றிப் பெற்றது.
Trending
இதுரை, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடமிருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தை கைப்பற்றினார். முதலிடத்தில் மலிங்கா இருக்கிறார்.
மும்பை அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்:
- லசித் மலிங்கா 195
- ஜாஸ்பிரித் பும்ரா 148
- ஹர்பஜன் சிங் 147
- கைரன் பொலார்ட் 79
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News