
IPL 2022: MI skipper Rohit expresses disappointment after losing to CSK in last-ball thriller (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது. இதே மைதானத்தில் தான் 2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது.
தற்போது 12 ஆண்டுகள் கழித்து, ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிஎஸ்கே முடிவுரை எழுதியுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 7 போட்டிகளில் தோற்ற அணி என்ற சோகமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்தது. தோனியின் அதிரடி பேட்டிங்கை கண்டு ரோஹித் சர்மா தலையில் கையை வைத்து, மைதானத்தில் படுத்துவிட்டார். ஜடேஜாவோ தோனிக்கு தொப்பியை கழற்றி மரியாதை செய்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.