
IPL 2022: Mumbai Indians Fined For Slow Over Rate Against Delhi Capitals (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போடியில் அக்ஸர் படேலின் காட்டடி ஆட்டம், லலித் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட்செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.