Advertisement

அஸ்வின் செய்தது சரியா? ஐபிஎல்-ல் புதிய சர்ச்சை!

ஐபிஎல் தொடரிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளார் ஆர். அஸ்வின்.

Advertisement
IPL 2022: On Sunday, We Saw The Future Of T20 Cricket
IPL 2022: On Sunday, We Saw The Future Of T20 Cricket (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 11, 2022 • 02:46 PM

ஐபிஎல் வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெறாத அரிதான நிகழ்வு நேற்றைய போட்டியில் நடைபெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலாவதாக பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முதல் 10 ஓவர்களில் அந்த அணி பெரிய சிக்கலை சந்தித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 11, 2022 • 02:46 PM

4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 67 ரன்களை மட்டுமே அவர்கள் குவித்து இருந்ததால் பின் வரிசையில் வரும் வீரர்கள் எப்படி பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் களம்புகுந்து ஹெட்மயர் உடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் 15 ஓவர் வரை விக்கெட் விழாமல் பந்துகளுக்கு இணையாக ரன்களை குவித்து இருக்க அதன் பின்னர் 16-வது ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினர்.

Trending

ஒரு பக்கம் ஹெட்மயர் மிகவும் அதிரடியாக விளையாடி கொண்டிருக்க அஸ்வின் கடைசி 2 ஓவர்களில் மீதம் இருக்கும் வேளையில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரிட்டயர்டு அவுட் என்கிற விதிமுறைப்படி முதல் நபராக இந்த முடிவை எடுத்து களத்தில் இருந்து வெளியேறினார். ஏனெனில் மீதமிருக்கும் இரண்டு ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் எனில் யாராவது வந்து அதிரடி காட்ட வேண்டும் என்பதனால் அஸ்வின் அவ்வாறு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவருக்கு பின்னர் வந்த ரியான் பராக் ஹெட்மயருடன் சற்று அதிரடியில் கைகொடுக்க ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165 ரன்களை அடித்தனர். பின்னர் தொடர்ந்து விளையாடிய லக்னோ அணியால் 162 ரன்களை மட்டுமே குவிக்க 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் பெரிதாக எடுக்காத இந்த விதிமுறையை அஸ்வின் கையிலெடுத்தது அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் ரிட்டயர்டு அவுட் என்றால் என்ன? ஐபிஎல் விதிமுறை அதற்குக் கூறும் விளக்கம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். அதன்படி ரிட்டயர்டு அவுட் என்ற விதிமுறையை எடுக்க வேண்டுமெனில் போட்டியின்போது பேட்ஸ்மேன்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ரன் குவிப்பில் தொய்வு ஏற்படும்போதோ அல்லது அடுத்த பேட்ஸ்மேனை களமிறக்க விரும்பினாலோ இந்த ரிட்டயர்ட் அவுட் என்ற விதிமுறையை பயன்படுத்தலாம். வழக்கமாக ரிட்டையர்ட் ஹர்ட் என்ற விதிமுறையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அப்படி என்றால் நீங்கள் காயத்தினால் அல்லது தனிப்பட்ட காரணத்தினால் ரிட்டையர்டு ஹர்ட் ஆகும்போது மீண்டும் விக்கெட் விழுந்த பின்னர் வந்து பேட்டிங் செய்யலாம். ஆனால் ரிட்டயர்ட் அவுட் என்கிற இந்த விதிமுறையை கையிலெடுக்கும் பேட்ஸ்மேன்கள் மீண்டும் பேட்டிங் செய்ய வர முடியாது. அவர்கள் ஆட்டமிழந்துவிட்டனர் என்றே அர்த்தம். அப்படி இந்த ரிட்டயர்டு அவுட் என்ற விதிமுறையை எடுத்த முதல் நபராக அஸ்வின் தற்போது மாறியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இந்த விதிமுறை இருந்தாலும் பெரிய அளவில் யாரும் செய்ததில்லை. தற்போதுதான் அஸ்வின் முதல் முறையாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement