ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸில் இணையும் குல்கர்னி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் தவல் குல்கர்னி இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 15ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 8 போட்டியில் தோல்வியை தழுவி, நாக் அவுட் சுற்றிலிருந்து வெளியேறியது.
இன்னும் எஞ்சிய 6 போட்டியில் மும்பை அணி விளையாட வேண்டும். இதில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மும்பை சில மாற்றங்களை செய்துள்ளது.
Trending
மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் பந்துவீச்சு தான். நட்சத்திர வீரர் பும்ராவே இதுவரை 5 விக்கெட்டை தான் வீழ்த்தி இருக்கிறார்.
இதுவரை 8 போட்டியில் விளையாடிய பும்ரா 229 ரன்களை விட்டு கொடுத்துள்ளார். சராசரி 50ஐ தொடுகிறது. 5 போட்டியில் விளையாடியுள்ள உனாட்கட் 6 விக்கெட்டுகளை எடுத்து 190 ரன்களை விட்டு கொடுத்துள்ளார். டேனியல் சாம்ஸ் 5 போட்டியில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்து 209 ரன்களை விட்டு கொடுத்துள்ளார்.
டைமல் மில்ஸ் 5 போட்டியில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்து 190 ரன்களை விட்டு கொடுத்துள்ளார். பாசில் தம்பி 5 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 152 ரன்களை விட்டு கொடுத்துள்ளார். இப்படி அணியில் உள்ள எந்த பந்துவீச்சாளரும் சரியாக பந்துவீசாததால், நடப்பு சீசனில் அனைத்து அணியை விட மோசமான எக்னாமியை வைத்துள்ள அணி என்ற சோக சாதனையை படைத்துள்ளது.
இந்த நிலையில், மும்பை அணி 33 வயதான தங்களது ஆஸ்தான பந்துவீச்சாளரான குல்கர்னியை அணியில் சேர்த்துள்ளது. இதனையடுத்து தவால் குல்கர்னி பயோ பபுளில் வந்து இணைந்துள்ளார். பயிற்சி முகாமில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்த்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும். தவான் குல்கர்னி இதுவரை 92 ஐபிஎல் போட்டியில் விளையாடி 86 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதனிடையே மும்பை அணியில் அர்சத் கான் என்ற வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மத்திய பிரதேச அணிக்காக உள்ளூர் போட்டியில் விளையாடும் இடதுகை சுழற்பந்துவீச்சாளராக குமார் கார்த்திக்யே சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி ஓப்பந்தம் செய்துள்ளது. கார்த்திகேயா 8 டி20 போட்டியில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now