
கேஎல் ராகுல் அதிரடி பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் என்ற மூன்று பொறுப்பையும் செய்ய கூடிய திறமையான வீரர். கேப்டனாக ராகுல் சறுக்கினாலும் இம்முறை கம்பீரின் அனுபவம் மூலம் ராகுல் நடப்பு சீசனில் கேப்டன்ணியில் தன்னை மெருகேற்றியுள்ளார்.
இதுவரை விளையாடிய 5 போட்டியில் லக்னோ அணி மூன்றில் வென்றுள்ளது. தற்போது மும்பையுடன் லக்னோ தனது 6ஆவது போட்டியில் விளையாடுகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது, பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் சூழலுக்கு ஏற்ப மாற்றுவது என்று ராகுல், தற்போது கேப்டன்ஷி திறனில் முன்னேறி வருகிறார்.
இந்த நிலையில், கேஎல் ராகுலுக்கு இது 100ஆவது ஐபிஎல் போட்டியாகும். இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் 99 போட்டி முடிவில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுல் 2ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் கெயில் 3578 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ராகுல் 3405 ரன்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.