
இந்த தொடரில் ரிஷப் பந்த் அதிரடியாக ஆடினாலும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் ஆட்டமிழந்து வருகிறார். இதுவரை 11 போட்டியில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், 281 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.ஸ்ட்ரைக் ரேட் 152 என்ற அளவில் உள்ளது.
நடப்பு சீசனில் 7 போட்டியில் 172 முதல் 223 ரன்கள் இலக்தை துரத்திய டெல்லி 5 போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த போட்டிகளில் ரிஷப் பந்த் ஸ்கேர்ர் பின்வரும்மாறு 43(29), 34 (17), 44 (24), 44 (30), 21 (11). குறிப்பாக குஜராத்துக்கு எதிராக 172 ரன்களை டெல்லி துரத்தும் போது 36 பந்துகளில் 54 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படுகிறது.
அப்போது ரிஷப் பந்த் ஆட்டமிழந்து விடுவதால் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போன்று 196 ரன்கள் என்ற இலக்கை லக்னோவுக்கு எதிராக டெல்லி துரத்தியது. அப்போது வெற்றிக்கு 43 பந்துகளில் 76 ரன்கள் தேவைப்பட்ட போது ரிஷப் பந்த் ஆட்டமிழக்க, டெல்லி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி விடுகிறது.