IPL 2022: Ravi Shastri likely to sign up as coach of Ahmedabad team (Image Source: Google)
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கோலி மற்றும் ரவி சாஸ்திரி தான்.
இந்த உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பதவி விலகவுள்ளார். இதே போல இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த தொடருடன் முடிவடைகிறது. அவருக்கு மாற்றாக புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுவிட்டார்.
இந்நிலையில் ரவி சாஸ்திரி பதவி விலகியவுடன் அவரை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள ஐபிஎல் அணிகள் போட்டி போட்டு வருகின்றனர். அந்தவகையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி கண்டுள்ளதாக தெரிகிறது.