IPL 2022: RCB pacer Harshal Patel bereaved (Image Source: Google)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் முடிவடைந்தவுடன் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த தகவல் ஹர்ஷல் படேலுக்குத் தெரியவந்தது. அதன்படி அவரது சகோதரி உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகிறது.
இதையடுத்து, ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திலிருந்து அவர் வெளியேறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்துக்கு முன்பு அவர் மீண்டும் அணியில் இணைவார் என தகவலறிந்த ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்தன.