ஐபிஎல் 2022: பிளே ஆஃப் சுற்றில் ஹர்ஷல் படேல் விளையாடுவாரா?
குஜராத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் பாதியிலே வெளியேறினார்.
ஐபிஎல் 15ஆவது சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி நேற்று தகுதி பெற்றது. டெல்லி அணியை மும்பை வீழ்த்தியதன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பெங்களூரு அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் கடந்த 19 ஆம் தேதி குஜராத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஒரு ஓவர் வீசிய நிலையில் கேட்ச் பிடிக்கும் போது காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலெயே வெளியேறினார்.
Trending
இந்த நிலையில் பிளே ஆப் சுற்றில் 25 ஆம் தேதி லக்னோ அணியை எதிர்கொள்ளும் பெங்களூரு அணியில் ஹர்ஷல் பட்டேல் விளையாடுவாரா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் நிலவியது.
இந்த கேள்விக்கு தற்போது ஹர்ஷல் பட்டேல் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " நான் அந்த பந்தை ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் பிடித்தபோது, வலது கையில் காயம் ஏற்பட்டது. எனக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. அவை மூன்று முதல் நான்கு நாட்களில் குணமடைந்துவிடும். பிளே ஆப் போட்டிக்கு நான் தயாராக இருப்பேன் என்று நினைக்கிறேன்," என தெரிவித்தார்.
இதனால் அவர் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now