
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் இன்னும் 2 நாட்களில் (மார்ச் 26 ) தொடங்கவுள்ளது. இந்த முறை அனைத்து லீக் போட்டிகளும் மும்பை, புனே நகரங்களிலேயே நடைபெறவுள்ளன.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டி என்பதால், இரு அணிகளின் திட்டங்கள் என்ன, பிளேயிங் 11 எப்படி இருக்கப்போகிறது என முன்னணி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் தான் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதாவது கொல்கத்தா அணியில் சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விளையாடுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் டாப் இடத்தில் இவரும் ஒருவர். ஆனால் ஷெல்டன் ஜாக்சனை இந்திய வீரர் எனக்கூறாமல், அயல்நாட்டு வீரர்கள் பட்டியலில் பத்திரிகையாளர்கள் கூறினர். தொடர்ச்சியாக 3 முறை கூறிய போதும் அதனை நிகழ்ச்சி தொகுப்பாளரும் தடுக்காமல் இருந்துள்ளார்.