
பரபரப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், முஸ்தஃபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கரும் 13 ரன்களில் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் அரைசதம் கடக்க, மறுமுனையிலிருந்த ஹர்திக் பாண்டியா 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.