
IPL 2022: Sunrisers Hyderabad Finishes off 157/8 on their 20 overs (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனின் கடைசி லீக் ஆட்டம் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் பிரியம் கார்க் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் த்ரிபாதி 20 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த ஐடன் மார்க்ரம் 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.