Advertisement
Advertisement
Advertisement

குஜராத் டைட்டன்ஸில் சுரேஷ் ரெய்னா? ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்ய வேண்டும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில், ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 02, 2022 • 20:24 PM
IPL 2022: Suresh Raina Joining Gujarat Titans? - Former Cricketer's Social Media Post Leaves Netizen
IPL 2022: Suresh Raina Joining Gujarat Titans? - Former Cricketer's Social Media Post Leaves Netizen (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் நேற்று அறிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்த ராய், கரோனா சூழலால் இருக்கும் பயோ - பப்புள் நிலையால் சோர்வடைந்துள்ளதாகவும், இந்த நேரத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடவிருப்பதாகவும் கூறி, ஐபிஎல் தொடரில் விலகும் அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில், ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்க வேண்டும் என்று இன்று காலை முதலே ரசிகர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending


இதனால், காலை முதல் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா பெயர்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது. கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ரெய்னாவை, சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்க முன்வரவில்லை. 

ஐபிஎல் தொடரில் 5000 ரன்களுக்கு மேல் எடுத்த ஆறு வீரர்களில் ஒருவர், 205 ஐபிஎல் போட்டிகளில் 5528 ரன்கள் எடுத்த ஒரு வீரர் என்ற சாதனையால், 'மிஸ்டர் ஐபிஎல்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவந்த ரெய்னா ஏலம் போகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஃபார்மில் இல்லை என்பதால்தான் எந்த அணி நிர்வாகமும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. எனினும், அவர் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருப்பதையே இன்றைய ட்ரெண்டிங் காட்டுகிறது.

ரசிகர்கள் ராய்க்கு பதிலாக ரெய்னாவை சேர்க்க வேண்டும் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டிருந்தபோது குஜராத் லயன்ஸ் அணியை ரெய்னா வழிநடத்தினார். இதனை நியாபகப்படுத்தி ரசிகர்கள், அந்த அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement