ஐபிஎல் 2022: சூர்யகுமார் யாதவின் அதிரடியால் தப்பிய மும்பை!
ஐபிஎல் 2022: ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Trending
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து இஷான் கிஷான் 26, திலக் வர்மா 0, பொல்லார்ட் 0, ராமந்தீப் சிங் 6 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மும்பை அணி 100 ரன்களுக்கு முன்னதாகவே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு துணையாக ஜெய்தேவ் உனாட்கட்டும் ரன்களைச் சேர்த்தார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது 15ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 68 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now