
IPL 2022: We have been brilliant with ball in all three games, says LSG captain KL Rahul (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அணியை வீழ்த்தி லக்னோ 2 ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் அளித்துள்ள பேட்டியில், "மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நிலைத்து நின்று ஆடவும், வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பை உருவாக்கவும் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளோம். இன்று (நேற்று) மீண்டும் அதைச் செய்தோம்.
இது போன்ற விளையாட்டுக்களில் வெற்றி பெறுவது மிகுந்த நம்பிக்கையைத் தரும். ஆக்ரோஷமான, ஆனால் ஆபத்து இல்லாத கிரிக்கெட்டை விளையாடி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.