
IPL 2022: Yashasvi Jaiswal's fifty helps Rajasthan Royals beat Punjab Kings by 6 wickets (Image Source: Google)
இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அந்த அணி தரப்பில் தவானும் பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி பஞ்சாப்பின் ரன் கணக்கை துவக்கினார் பேர்ஸ்டோவ். தவானும் தன் பங்குக்கு அதிரடியாகவே ஆட்டத்தை துவக்கினார்.
3ஆவது ஓவரை வீசிய போல்ட் மிக அபாரமாக அந்த ஓவரை வீசி, ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் அந்த ஓவரை மெய்டன் ஓவராக்கினார். கூல்தீப் சென் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி, ரன் தேக்கத்தை ஈடுசெய்தார் பேர்ஸ்டோவ். அடுத்து போல்ட் வீசிய 5வது ஓவரில் இருவரும் இணைந்து 2 பவுண்டரி , ஒரு சிக்ஸர் விளாச அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறத் துவங்கியது.