
சர்வதேச கிரிக்கெட் நல்ல வரவேற்பினை பெற்று உச்சத்தில் இருந்த போது இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் டி20 தொடரானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை தலைமையாகக் கொண்டு பல அணிகளாக பிரிக்கப்பட்டு அதில் உள்ளூர் வீரர்களையும் இணைத்து தரமான பொழுதுபோக்கை இந்த போட்டிகளின் மூலம் ஐபிஎல் வழங்கி வந்தது.
அப்படி அன்று தொடங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது 14 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 15ஆவது சீசனில் அடி எடுத்து வைத்து அற்புதமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் அவ்வப்போது சில விதிமுறைகள் மாறி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் குறிப்பிட்ட சில விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் வழங்கி அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்ற வேளையில் பஞ்சாப் வீரர் லியாம் லிவிங்ஸ்டன் அடித்த 5 சிக்ஸர்களில் ஒன்று 100 மீட்டருக்கு மேல் சென்று அதாவது 108 மீட்டர் வரை சென்று விழுந்தது.