
IPL 2023: A Special Initiative by Gujarat Titans Tonight ! (Image Source: Google)
கடந்தாண்டு ஐபிஎல்-இல் புதிய அணியாக உதயமாகியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா தலைமையில் தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையையும் வென்று அசத்தியது. தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இந்த அணிதான்.
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் குஜராத் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதரபாத அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில்,இந்தப் போட்டியில் குஜராத் அணி நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியில் விளையாட உள்ளது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுதத இவ்வாறு விளையாட உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.