
எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. பத்து அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்துள்ள வீரர்களின் விவரத்தை வெளியிடுவதற்கான கெடு தேதி நாளை (நவம்பர் 15) முடிவடைய உள்ளது. இந்த சூழலில் சிஎஸ்கே உட்பட அணிகள் தக்க வைத்த, ரிலீஸ் செய்த வீரர்கள் குறித்த உத்தேச தகவல் இதோ.
பத்து அணிகளும் விடுவித்த மற்றும் தக்க வைக்க உள்ள வீரர்களின் உத்தேச பட்டியல் இதுவாக இருக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அடுத்த சீசனில் விளையாடாத வீரர்களும் அடங்குவர்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டேவிட் வில்லியை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னர், நாரயணன் ஜெயகதீசன் ஆகியோரை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.