
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் வரும் 23ஆம் தேதி கொச்சியில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து தெளிவுடன் உள்ளனர்.
5 முறை சாம்பியனும், வலுவான கோர் கட்டமைப்பை கொண்ட அணியுமான மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃபிற்குக்கூட முன்னேறாமல் வெளியேறியது. அதற்கு அந்த அணியிடம் தரமான டாப் ஸ்பின்னர் இல்லாததும் ஒரு காரணம். அந்தவகையில், ஒரு டாப் ஸ்பின்னரை அணிக்குள் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஸ்பின்னரை ஏலத்தில் எடுக்கலாம் என்று அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, “மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தரமான டாப் ஸ்பின்னர் ஒருவர் இல்லை. கடந்த சீசனில் குமார் கார்த்திகேயா அந்த அணிக்கு நன்றாக செயல்பட்டார். இந்தியாவை சேர்ந்த அனுபவம் வாய்ந்த சீனியர் ஸ்பின்னர் தேவை என்றால், அமித் மிஷ்ரா அல்லது பியூஷ் சாவ்லா ஆகியோரில் ஒருவரை எடுக்கலாம். ஒருவேளை வெளிநாட்டு ஸ்பின்னரை எடுப்பதென்றால், அடில் ரஷீத், டப்ரைஸ் ஷம்ஸி, ஆடம் ஸாம்பா ஆகியோரில் ஒருவராக இருக்கலாம்.