ஐபிஎல் 2023: மினி ஏலத்திற்கான இடம், தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசன் தொடங்க இன்னும் 4 மாதங்களே உள்ளது. இதனால் அடுத்த சீசனுக்கான பணிகளை பிசிசிஐ தீவிரமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே எந்த அணி, எந்த வீரர்களை விடுவிக்கிறோம் என்பது தொடர்பான அறிவிப்பை வரும் 15ஆம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்காக தனது பயிற்சியை தொடங்கி வருகிறார்.
டெல்லி அணி ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், நியூசிலாந்து வீரர் டிம் செஃபர்ட், அஸ்வின் ஹேபர், மந்தீப் சிங் ஆகியோரை விடுவிக்க உள்ளது. சிஎஸ்கே அணி ஆடம் மில்னே மற்றும் கிறிஸ் ஜார்டன் ஆகியோரை விடுவிக்க உள்ளது. அதற்கு பதிலாக இம்முறை ஏலத்தில் பங்கேற்க உள்ள சாம் கரனையும், டெல்லி அணி விடுவித்துள்ள ஷர்துல் தாக்கூரையும் சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறது. தீபக் சாஹரும் உடல் தகுதியுடன் இருந்தால், சென்னை அணி ஒரு வகையில் பலமான அணியை தயாரித்துவிடும்.
Trending
இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் காமரூன் கிரீன் மற்றும் இங்கிலாந்து அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் சாம் கரனும் வருகிறார். இதில் சிஎஸ்கே குறி சாம் கரன் தான். ஆனால் பஞ்சாப் அணி, இந்த மூன்று வீரர்களையும் தங்களது அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக மினி ஏலத்தில் 35 கோடி ரூபாய் பணத்தை அதிகபட்சமாக வைத்திருக்கும் வகையில் பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளது. அதன் படி அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஷாரூக்கான், மாயங் அகர்வால், ஒடியன் ஸ்மித் ஆகியோரை விடுவித்து, இந்த 3 வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களையும் வாங்க பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெகா ஏலம் போல் 2 நாள் நடைபெறாமல், இது 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் தான் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் இம்மாதம் இறுதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now