
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணி துவங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎலில் 5 முறை கோப்பை வென்ற ஒரே அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பாக சோபிக்கவில்லை. குறிப்பாக, கடந்த சீசனில் இளம் வீரர்களை நம்பி களமிறங்கி பலத்த அடி வாங்கியது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் மட்டுமே கிடைத்தது.
கடந்த சீசனுக்கு முன் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஹார்திக் பாண்டியா, போல்ட், டி காக் போன்ற முக்கிய வீரர்களை அந்த அணி வெளியேற்றியதால்தான், இந்த நிலை அந்த அணிக்கு ஏற்பட்டது. இதனால், மீண்டும் அதேபோல திறமையான வீரர்களை வாங்கி, அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நிர்வாகம் இருக்கிறது.