ஐபிஎல் 2023: மார்ச் 31 -இல் தொடரை தொடங்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ இறுதி செய்துள்ளது எனினும் ஐபிஎல் போட்டிக்கு முன்பும், பின்பும் பெரிய தொடர் நடைபெறுவதால் புது சிக்கல் உருவாகி உள்ளது.
கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு முதல் முறையாக பழைய வடிவத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறகிறது. அதாவது, சொந்த மண்ணில் 7 போட்டி மற்றும் வெளியூரில் 7 போட்டிகள் என ஒவ்வொரு அணியும் விளையாட உள்ளது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல ஆண்டுகளுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை மார்ச் 31ஆம் தேதி அல்லது ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்க பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. சுமார் 2 மாதம் இந்த தொடர் நடைபெற உள்ளது.
Trending
மேலும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி அல்லது ஜூன் 4ஆம் தேதி முடிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. கடந்த முறை குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இம்முறை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் முதல் போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் குஜராத் அணி, ராஜஸ்தான் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மார்ச் மாதம், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில், ஒருநாள் தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது இதனால் அந்த தொடர் முடிந்த 2 நாட்களில் ஐபிஎல் தொடங்கும் வகையில் அட்டவணை உள்ளதால் பிசிசிஐ குழுப்பத்தில் உள்ளது.
இதனிடையே, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மே 28ஆம் தேதி ஐபிஎல் முடிந்தாலும், ஜூன் 4ஆம் தேதி முடிந்தாலும் மற்ற அணி வீரர்களுக்கு சிக்கல் ஏற்படும். மேலும் இந்திய அணிக்கு அந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதால் ஓய்வே இல்லாமல் பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தொடரை மாற்றிவிட்டு, ஐபிஎல் போட்டியை முன்பே தொடங்கி விடலாமா என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now