
ஐபிஎல் 16ஆவது சீசனின் இரண்டாம் பாதியின் தொடக்க போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணியால் 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்டாவது போட்டியில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. எட்டாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது நான்காவது தோல்வி ஆகும்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில், “கடைசி மூன்று நான்கு போட்டிகளாக இதைத்தான் கூறி வருகிறேன். எப்பொழுதுமே ஒரு அணியாக நாம் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் முடிவு நமக்கு சாதகமாக அமையும். உங்களுடைய ஓய்வு அறையில் அனைவருமே மிகச் சிறந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது போட்டியின் போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.