
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை – மும்பை அணிகளுக்கிடையேயான முதல் போட்டி இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎஸ் என்றால் இந்த இரண்டு அணிகளும் தான். ஏனென்றால், இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போது இந்தியா – பாகிஸ்தான் போட்டியை போல் பார்க்கப்படும். அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். மேலும், இந்த இரண்டு அணிகளும் தான் ஐபிஎல் வரலாற்றில் அதிமுக முறை கோப்பையை வென்றவர்கள்.
சென்னை – மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இந்த சீசனில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று, தற்போது மூன்றாவது போட்டியில் மும்பையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மறுபக்கம், முதல் போட்டியில் தோல்வி சந்தித்த பின், இரண்டாவது போட்டியை எதிர்கொள்ளும் மும்பை, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வான்கடே மைதானத்தில் நடந்த பயிற்சிக்கு பிறகு காலில் வலி ஏற்பட்டதாக பென் ஸ்டோக்ஸ் கூறிய நிலையில், அவர் மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.