
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 25ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 28 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - கேமரூன் க்ரீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வெறும் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.