
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலம், கொச்சியில் இன்று நடைபெற்றது. இதற்காக மொத்தம் 991 வீரர்கள் பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருப்பினும், அவர்களில் 369 வீரர்களை மட்டுமே ஐபிஎல் நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.
இதுதவிர 10 அணிகளும், தங்களுக்கு தேவையான இளம் வீரர்களை ஏலப் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்தன. அந்த வகையில் 36 பேர் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 405 பேர் மினி ஏலத்தில் பங்கேற்றனர். இதில் 273 பேர் இந்திய வீரர்களாகவும், 132 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இடம்பிடித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஷ் ஜோர்டன், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், மினி ஏலத்தில் ஒன் டவுன் இடத்திற்கு உத்தப்பாவிற்கு மாற்றாக அஜிங்கிய ரஹானேவை சிஎஸ்கே 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.