
நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து, இறுதிப் போட்டிக்கான குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து வருகின்ற 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான குவாலிஃபயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்த முறை பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபயர் மற்றும் முதல் எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஒரு அட்வான்டேஜ் ஆக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கிடம் கேட்ட பொழுது, “சென்னையில் உள்ள நிலைமைகள் குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மற்ற ஆண்டுகளில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.