ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் - எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, அதன் பிறகு லக்னோவை 12 ரன் வித்தியாசத்திலும், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானேவின் அதிவேக அரைசதமும், ரவீந்திர ஜடேஜாவின் சுழல் ஜாலமும் வெற்றிக்கு உதவின.
உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும். ஏற்கெனவே சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்திய சென்னை அணி இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.
இதே போல் பெருவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை என்ற தகவலும் உள்ளது. இதனால் உள்ளூர் ஆட்டத்தை ஸ்டோக்சும் தவற விடுகிறார். மற்றபடி ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ரவீந்திர ஜடேஜா, ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, கேப்டன் தோனிஉள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர்.
அதேசமயம் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (பஞ்சாப்புக்கு எதிராக) 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் தான் பேட்டிங் முதுகெலும்பாக உள்ளனர். இருவரும் தலா இரு அரைசதம் நொறுக்கியுள்ளனர்.
கேப்டன் சாம்சன், ரியான் பராக் மற்றும் பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அஸ்வின் வலு சேர்க்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் ராஜஸ்தான் வியூகங்களை தீட்டியுள்ளது. ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் -26
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 15
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 11
உத்தேச லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கே), ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், சிசண்டா மகலா, துஷார் தேஷ்பாண்டே.
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், டெவான் கான்வே, சஞ்சு சாம்சன்
- பேட்டர்ஸ் – ருதுராஜ் கெய்க்வாட், ஷிம்ரோன் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், மொயின் அலி
- பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட்
கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - ஜோஸ் பட்லர், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மொயீன் அலி
Win Big, Make Your Cricket Tales Now