ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன். இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல சந்தித்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பதிரானாவும் சென்னை அணிக்கு வலுசேர்க்கிறார்கள். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
முதல் 3 ஆட்டங்களில் அசத்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை அணி 226 ரன்கள் குவித்தும் 8 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் பலவீனமாக இருந்தது. அந்த தவறை உடனே சரிசெய்ய வேண்டும்.
கால் பெருவிரவில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் விளயாடாமல் இருந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உடல் தகுதியை எட்டி பயிற்சியில் ஈடுபடுவதால் அணிக்கு மீண்டும் திரும்புகிறார். இது கூடுதல் வலுசேர்க்கும். இதனால் இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 9ஆவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத்தை பொறுத்தமட்டில் நிலையற்ற பேட்டிங் அந்த அணிக்கு பாதகமாக உள்ளது.
இருப்பினும் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் சதமடித்திருப்பது அந்த அணியின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்து மற்ற பேட்டர்களும் சோபிக்கும் பட்சத்தில் நிச்சயம் அந்த அணி சவாலளிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதெபோல் பெரிய அளவில் சோபிக்காத தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சொந்த ஊரில் ஜொலித்து தனது அணிக்கு பலம் சேர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 18
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 13
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 05
உத்தேச லெவன்
சிஎஸ்கே - டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ஷிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, மதிஷா பத்திரனா.
எஸ்ஆர்எச் - ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், மயங்க் மார்கண்டே.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே
- பேட்ஸ்மேன்கள் - அஜிங்கியா ரஹானே, மயங்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன்
- பந்துவீச்சாளர்கள் - டி நடராஜன், மயங்க் மார்கண்டே, துஷார் தேஷ்பாண்டே
கேப்டன்/துணைகேப்டன் - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ஹாரி ப்ரூக், அஜிங்கியா ரஹானே, ஐடன் மார்க்ரம்.
Win Big, Make Your Cricket Tales Now