
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய மிக முக்கியமான போட்டியில் ஏற்கனவே பிளே-ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி கேப்பிட்டஸ் அணியிடம் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில், பஞ்சாப் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீசுகையில் 20ஆவது ஓவரை சுழற்பந்து வீச்சாளருக்கு கொடுத்தார் கேப்டன் ஷிகர் தவான்.
இந்த முடிவு அவர்களுக்கு சரியாக அமையவில்லை. அந்த ஓவரில் சுழல் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த இடத்தில் தான் தவறு நடந்தது. டெல்லிக்கு திருப்புமுனையாக மாறியது என்று குறிப்பிட்டு போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் பேசியுள்ளார் ஷிகர் தவான்.
இதுகுறித்து பேசிய அவர், “இன்றைய போட்டி முடிவு விரக்தியை கொடுக்கிறது. நாங்கள் பந்துவீசுகளில் பவர் பிளே ஓவர்களில் சரியாக பந்து வீசவில்லை. பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், பவர்-பிளேவில் சில விக்கெட் எடுத்திருக்க வேண்டும். போட்டி மிக நெருக்கமாக சென்றது. ஆனால் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. கடைசி ஓவரில் அந்த நோ-பால் வீசிய பிறகு எங்களுக்கு சிறிய நம்பிக்கை பிறந்தது. ஆனால் வெற்றி பெற்ற அணியாக இல்லாதது வருத்தமளிக்கிறது. லிவிங்ஸ்டன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். போராடினார்.