ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த தொடரில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 59ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இப்போட்டி முக்கியமானது என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்கான என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி, சென்னையிடம் வீழ்ந்ததால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது. இருப்பினும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க அந்த அணி முயற்சிக்கும். அந்த அணியில் பேட்டிங்கில் வார்னர், அக்ஷர் பட்டேல் தவிர யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.
பஞ்சாப் அணி விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஷிகர் தவான், ஜிதேஷ் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், நாதன் எலிஸ், சாம் கரன், ஹர்பிரீத் பிராரும் பலம் சேர்க்கிறார்கள். முந்தைய இரண்டு ஆட்டங்களில் மும்பை, கொல்கத்தாவிடம் அடுத்தடுத்து உதை வாங்கிய பஞ்சாப் அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகள் இடையிலான மோதலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 30
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 15
- பஞ்சாப் கிங்ஸ் - 15
உத்தேச லெவன்
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர் (கே), பில் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலே ருஸ்ஸோ, ரிப்பிள் படேல், அக்ஷர் பட்டேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கே), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் கரன், ஷாருக்கான், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ்.
உத்தேச லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - பில் சால்ட், ஜிதேஷ் சர்மா
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், ஷிகர் தவான் (துணை கேப்டன்), ரைலீ ரூஸோவ்
- ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ் (கேப்டன்), அக்ஷர் படேல், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன்
- பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ்
*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now