
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 41ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுவ்ரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் 37 ரன்களைச் சேர்த்த நிலையில் சிக்கந்தர் ரஸா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவான் கான்வே அரைசதம் கடந்து அசத்தினார். இதற்கிடையில் ரஹானே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிவம் தூபே களமிறங்கி 2 இமாலய சிக்சர்களை பறக்கவிட்ட கையோடு 28 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.