
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 37ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர் ஆர் அணி முதலில் பேட்டிங் தேர்வ் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்துக் கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் துருவ் ஜூரெல் 34 ரன்கள், படிக்கல் 27 ரன்கள் நாட் அவுட் என்று ரன்கள் சேர்க்க இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷிவம் துபே மட்டும் அரைசதம் அடித்துக் கொடுத்தார். ருத்துராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா மற்றும் மொயீன் அலி இருவரும் தலா 23 ரன்கள் எடுக்க கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி, “இந்த போட்டியில் அவர்கள் போதுமான ரன்களை விட சற்று அதிகமாக குவித்து விட்டார்கள். முதல் ஆறு ஓவர்களிலேயே நாங்கள் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுத்து விட்டோம். இந்த மைதானத்தில் போதுமான ரன்களை விட நாங்கள் கூடுதலாகங்களை விட்டுக் கொடுத்ததே தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.