X close
X close

ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan May 24, 2023 • 12:53 PM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

 • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
 • இடம் - எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
 • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக 2ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. கடந்த சீசனில் அந்த அணி எலிமினேட்டர் சுற்றில் பெங்களூருவிடம் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. இம்முறை வலுவான பந்து வீச்சு தாக்குதல், மிடில் ஆர்டர் பேட்டிங்கை லக்னோ அணி கொண்டுள்ளது.

குயிண்டன் டி காக், பிரேரக் மன்கட், குர்னால் பாண்டியா, ஸ்டொய்னிஸ், பதோனி, நிகோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், மோஹ்சின் கான், அவேஷ்கான், நவீன் உல்ஹக், அமித் மிஷ்ரா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருடன் கிருணல் பாண்டியாவும் சீரான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இருப்பினும் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர்களாது இடத்தை குயின்டன் டி காக் மற்றும் மொஹ்சின் கான் ஆகியோர் நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையிலான் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்திருந்த நிலையில் இந்த சீசனில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அணியின் பந்து வீச்சு ஆட்டத்துக்கு ஆட்டம் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தினாலும் அதிரடி பேட்டிங்கின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது மும்பை அணி. இது ஒருபுறம் இருந்தாலும் நடப்பு சாம்பியனான குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியதால்தான் மும்பை இந்தியன்ஸால் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது.

மும்பை அணி இந்த சீசனில் பவர் ஹிட்டர்களையே பிரதானமாக நம்பி உள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி சதம் விளாசியிருந்தார். இந்த சீசனில் 381 ரன்கள் சேர்த்துள்ள அவர், சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. 

ஒரு சதம், 4 அரை சதங்களுடன் 511 ரன்கள் வேட்டையாடி உள்ள சூர்யகுமார் யாதவ், 313 ரன்கள் சேர்த்துள்ள ரோஹித் சர்மா, 439 ரன்கள் குவித்துள்ள இஷான் கிஷன் ஆகியோர் லக்னோ அணியின் பந்து வீச்சு துறைக்கு சவால் கொடுக்க முயற்சிக்கக்கூடும். பந்து வீச்சில் பியூஸ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர்.

நேருக்கு நேர் 

 • மோதிய போட்டிகள் 03
 • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 03
 • மும்பை இந்தியன்ஸ் - 00

ஐபிஎல் கோப்பைகள்

 • ஐபிஎல் கோப்பைகள் - 15
 • மும்பை இந்தியன்ஸ் - 05
 • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 00
 • இதர அணிகள் -10  

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், பிரேராக் மன்காட், மார்கஸ் ஸ்டோனிஸ், குர்னால் பாண்டியா (கே), ஆயுஷ் பதோனி, நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கேட்ச்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நெஹால் வதேரா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.

உத்தேச லெவன்

 • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், இஷான் கிஷன்
 • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா
 • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோனிஸ், குர்னால் பாண்டியா (கேப்டன்), கேமரூன் கிரீன் (துணை கேப்டன்)
 • பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரவி பிஷ்னோய்

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now