
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுப்பது சந்தேகம் என்ற நிலையில், ஐந்து விக்கெட்டுகளை 89 ரன்களுக்கு இழந்து தத்தளித்து கொண்டு இருந்தது.
இப்படி கடுமையான சூழலில் களம் இறங்கிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் ஆட்ட சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக தாக்கி ஆடினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 20 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து, 29 பந்துகளில் 68 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து வந்த பெங்களூர் அணிக்கு கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் இளம் அறிமுக பந்துவீச்சாளர் சுயாஸ் சர்மா மூவரும் கடுமையான சோதனைகளை அளித்து, மூவரும் சேர்ந்து பெங்களூர் அணியின் ஒன்பது விக்கட்டுகளை பறித்து 17.4 ஓவர்களில் 123 ரன்களில் சுருட்டினார்கள். கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.