Advertisement

என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது - ரிங்கு சிங்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதை வென்ற ரிங்கு சிங் தனது அபார ஆட்டத்திற்கான காரணத்தை கூறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 09, 2023 • 20:59 PM
IPL 2023: 'Every ball that I hit out of the ground' says Rinku Singh!
IPL 2023: 'Every ball that I hit out of the ground' says Rinku Singh! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கேகேஆர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியும் இடம் பெற்றிருக்கிறது. ஹர்திக் பாண்டியா விளையாடாத முடியாத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஷித் கான் டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தார். தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் இருவரும் அபாரமாக விளையாடி அரை சதங்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி 204 ரன்களை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரில் இந்த அணிக்கு இதுவே அதிகபட்ச ஸ்கோர்.

மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஷ் மற்றும் ஜெகதீசன் இருவரும் ஏமாற்றினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். நிதீஷ் ரானா 45 ரன்களில் வெளியேற மிகச் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரை சதம் அடித்து, தொடர்ந்து வெற்றியை நோக்கி அணியை வலுவாக எடுத்துச் சென்றார். இந்தச் சூழலில் அவர் ஆட்டம் இழக்க கடைசி 4 ஓவர்களில், 50 ரன்கள் தேவைப்பட்டது.

Trending


இந்த நிலையில் ஆட்டத்தின் 17 வது ஓவரை வீசிய ரஷித் கான் தொடர்ந்து ரசல், நரைன், சர்துல் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆட்டம் ஒரே ஓவரில் குஜராத் அணியின் பக்கம் சென்றது. இந்த நிலையில் கடைசி ஓவருக்கு 29 ரன்கள் தேவைப்பட, களத்தில் ரிங்கு சிங் உமேஷ் யாதவ் இருவரும் இருந்தார்கள். யாஷ் தயால் கடைசி ஓவரின் முதல் பந்தில் உமேஷ் யாதவுக்கு சிங்கிள் தர, ரிங்கு சிங் அடுத்த ஐந்து பந்துகளை எதிர் கொண்டு, 5 பந்துகளையும் சிக்ஸர் அடித்து யாரும் எதிர்பார்க்காத கொல்கத்தா அணிக்கு தந்தார். இவர் 21 பந்துகளில் 48 ரன்களை 6 சிக்ஸ் மூலம் குவித்தார். இவரை ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ரிங்கு சிங் பேசுகையில், “என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை வைத்து கடைசி வரை விளையாடுங்கள், பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று ராணா கூறினார். கடைசி ஓவருக்கு முன்பாக நான் சிங்கிள் எடுக்க முயற்சி செய்யவில்லை. சிக்ஸர் அடிக்கவே முயற்சி செய்தேன். எதைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டாம், பந்துக்கு தகுந்தவாறு விளையாடுங்கள் என்று உமேஷ்  என்னிடம் கூறினார். நானும் எதைப் பற்றியும் பெரிதாக யோசிக்கவில்லை. பந்துக்கு மட்டுமே ரியாக்ட் செய்தேன். எனக்கு நம்பிக்கை இருந்தது; கடைசியாக அது நடந்தது” என்று கூறினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement