
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 32ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவிலுள்ள சின்னசாமை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச தீர்மான்னித்து பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் களமிறங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட் முதல் பந்திலேயெ விராட் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றி ஆர்சிபிக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் டிரெண்ட் போல்ட்டின் 100ஆவது ஐபிஎல் விக்கெட்டாகவும் இது அமைந்தது.