
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் 32 ரன்களும், டிம் டேவிட் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 157 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சாட்னர் மற்றும் துசார் தேஸ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு டெவான் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களத்திற்கு வந்த சென்னை அணியின் அறிமுக வீரரான ரஹானே முதல் பந்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தார்.