
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பல்வேறு அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் அவர்கள் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.
ஏற்கனவே மும்பை அணியில் பல நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கொல்கத்தா அணிக்கும் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் கேப்ட்ன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் குறைந்தது 3 மாதம் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார்.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, அவரால் குணமாக முடியும். ஆனால், உலக கோப்பை தொடர் நடைபெறம் இந்த தருணத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 7 முதல் 8 மாதம் கிரிக்கெட் பக்கமே திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.