Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்! 

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 27, 2023 • 21:43 PM
IPL 2023 Final - Chennai Super Kings vs Gujarat Titans, Preview, Expected XI & Fantasy XI Tips!
IPL 2023 Final - Chennai Super Kings vs Gujarat Titans, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி அஹ்மதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் முதல் போட்டியில் மோதிய சென்னை மற்றும் குஜராத் அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் மோத உள்ளன என்பதும் முதல் போட்டி நடந்த அதே அகமதாபாத் மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடரில் முதல் போட்டியில் மோதிய அணிகள் அதே மைதானத்தில் இறுதி போட்டியிலும் மோத உள்ளன என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். அதேசமயம் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணிக்காக 5 ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடனும், ஹர்திக் பாண்டியா தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்புடனும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் எதிகரித்துள்ளன.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அண்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம்,அஹ்மதாபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய சென்னை அணி, குஜராத் அணிக்கு எதிராக அதே அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பிறகு அணியை கேப்டன் தோனி தலைமையேற்று முதல் நபராக இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்துள்ளார். புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும், தோனி தலைமையிலான அணி, முதல் தகுதிச் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தற்போது மீண்டும் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட காத்திருக்கின்றனர்.

சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து டாப் ஆர்டரில் அபாரமாக செயல்பட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர். மிடில் ஆர்டரில் சிக்ஸர் தூபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஃபினீஷிங்கை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர்களும் தங்களது ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் சிஎஸ்கேவின் பேட்டிங்  பலமும் அதிகரிகரிக்கும். பந்துவீச்சில் தீபக் சஹார், மதீஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோர் உள்ளனர். இதில் பதிரானா, ஜடேஜா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அதிகளவில் ரன்களை வாரி வழங்குவதால் அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

கடந்த சீசனைப் போலவே இந்த சீசனிலும் குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தியது. அதற்கு முக்கிய காரணம், அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஃபார்மிலும் நம்பிக்கையுடனும் இருப்பதுதான். அதுவே அவர்களை தனி நபர்களாகவும், குழுவாகவும் வெற்றியடையச் செய்கிறது. ஹர்திக் – நெஹ்ரா இருவரும் கச்சிதமாக திட்டமிடுகின்றனர். ஆனால், குவாலிஃபையர் 1ல் சென்னையிடம் தோல்வியடைந்த அந்த அணி, குவாலிபையர் 2ல் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில், ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, விஜய் சங்கர், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், தசுன் ஷனகா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான் அகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஷுப்மன் கில் அடுத்தடுத்து 3 சதங்களை விளாசி உச்சகட்டா ஃபார்முடன் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி, மோஹித் சர்மா, ரஷித் கான், நூர் அஹ்மத் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு எதிரணி பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றனர். அவர்களுடன் யாஷ் தயாள், தசுன் ஷனகா, அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

இந்த முறை வெற்றி பெற்றால், அது சென்னையின் 5ஆவது கோப்பையாகும். இதன் மூலம் அதிக கோப்பைகளை வென்ற அணியை சமன் செய்யும் வாய்ப்பு சென்னைக்கு கிடைக்கும். கடந்த முறை சாம்பியனான குஜராத் அணி மீண்டும் வெற்றி பெற்றால், அது இரண்டாவது கோப்பையாகும். அந்த அணி நுழைந்து இரண்டாவது ஆண்டாக எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை என்ற சாதனையை நிகழ்த்தும். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 01
  • குஜராத் டைட்டன்ஸ் - 03

வானிலை

ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் மே 28ஆம் தேதி அகமதாபாத்தில் வானிலை தடையாக இருக்காது எனத் தெரிகிறது. 35 முதல் 40 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்றும், அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை அறிக்கை கூறுகிறது. எனவே போட்டி முழுவதும் நடைபெறும் என்பதில் ரசிகர்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

ஐபிஎல் கோப்பைகள்

  • ஐபிஎல் கோப்பைகள் - 15
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 04
  • குஜராத் டைட்டன்ஸ் - 01
  • இதர அணிகள் -10 

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, மொயின் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, மதிஷா பத்திரனா.

குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே
  • பேட்ஸ்மேன்கள் - ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - தீபக் சாஹர், முகமது ஷமி, மோஹித் ஷர்மா, ரஷித் கான், மதிஷா பத்திரனா

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement